அன்பு சகோதரர்களே! ஒவ்வொருத்தரும் கஷ்டப்படுவதற்கு காரணமே நம்முடைய அறியாமைதான். அந்த கஷ்டங்களை வெல்வதற்கு கல்லாலும், செம்பாலயும், தங்கத்தாலும் செய்து கொண்ட சிலைகளை கும்பிட்டுக் கொண்டு காலத்தை விரயமாக்குவது தவறு.
ஆகவே, நம் உடம்புக்குள்ளே ஓடுகின்ற மூச்சே, அதாவது மூச்சில் வரும் காற்று, உள்போகக்கூடிய மூச்சு பூரகமே என்று அகத்தியர் சொல்லியிருக்கிறார். பூரகமே உயிரன்று தெய்வம் என்று புகழ்ந்தார் ஐயா.
பட்டாடையை உடுத்திக் கொண்டு நகை நட்டை போட்டுக் கொண்டு, காலத்தை விரயமாக்கிக் கொண்டு, மாலையை போட்டுக் கொண்டு, விரதம் என்ற பேரிலே காலத்தை விரயமாக்கினால் அது அறியாமை. அப்படி செய்தால் மட்டும் கஷ்டம் தீர்ந்துவிடுமா? நோய்கள் போய்விடுமா?
ஒரு வேலை செய்தால் லாபம் கிடைக்கணும். அந்த வேலையெல்லாம் சீக்கிரம் முடியணும். அதுக்கு என்னவென்று கேட்டால், அட்சரம், சாமி கும்பிடுதல், பூஜை கதைக்கு ஆகாது.
அடுத்து யாரிடமாவது கடன் கொடுத்திருக்கிறோம் வசூல் பண்ண முடியவில்லை என்றால், அந்த காசை வசூல் பண்ணுவதற்கு வெள்ளிக்கிழமை இரவு படுத்திருந்து, அதாவது தன் தலையை மேற்கே வச்சு படுத்திருந்து, வடக்கு முகமாக பார்த்து, காலையில் நாலு மணியிலிருந்து ஆறு மணிக்குள் கட்டில் விட்டு இறங்காமல், தன்னுடைய மூச்சு காற்றை வாங்கிக் கொண்டே எழுந்து கண்ணைத் திறக்காமல் உட்கார்ந்திருந்து:
அப்படின்னு சொல்லி நீங்கள் மனதார நொந்தால் போதும். இறை ஆற்றல் உங்களுக்கு எப்படி உதவும் என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
அடுத்து பணம் நம்மிடம் இருக்க வேண்டும், சம்பாதித்த காசு நம்மிடம் இருக்க வேண்டும், நகை நட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால், இடது கையில் மூச்சை விட்டுக்கொண்டே இடது பாக்கட்டில் வைக்க வேண்டும். பீரோவில் வைக்கும் போதும் வலது மூக்கை அடைத்துக்கொண்டே இடது மூக்கில் மூச்சை விட்டுக்கொண்டே பொருளை வைக்க வேண்டும் அது தங்கும்.
நகையை கழுத்தில் மாட்டும் போதும் கடைசியாக கையை எடுக்கும் போது மூச்சை விட்டுக்கொண்டே எடுக்க அது தங்கும். இதை எல்லாம் பார்க்காமல் கடவுளை வழிபடுவது, ஜோசியம், மந்திரம் என்று நேரத்தை வீணாக்காதீர்கள்.
கத்தியோ, வன்முறையோ செய்பவன் வீரன் அல்ல, பஞ்சபூதங்களை வென்றவனே வீரன். கிரகங்கள் 7 இருந்து, 9 ஆகி, 10 ஆகியது. மாந்தி ராமாயண காலத்தில் வந்தது, ராகு கேது நிழல் கிரகங்கள், அதற்கு வீடு இல்லை, அதற்கு முன் 7 கிரகங்களே.
உணவருந்தும் போது எப்படி உணவருந்தணும். ஞாயிற்றுக்கிழமை உணவருந்தணும். கிழக்கு பார்த்து உணவருந்தணும், சீக்கிரம் ஜீரணம் ஆகும். ஒருவர் கஷ்டமா இருக்கு, நோயா இருக்கு, தொழில் இல்லை என்று சொல்லும் போது, சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அது உள் சென்று உங்களை தாக்கும். அவ்வாரு சொல்லும்போது மூச்சை வெளியிட்டுப் பழகவேண்டும்.
பிறரை காப்பாத்தும் சாக்கில் நீங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது, கவசங்கள் போட்டுக்கொள்ள வேண்டும், ப்ராணங்களை வெளியே விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நல்ல காரியம் சொல்லும்போது வீடு வாங்க போறேன், நகை வாங்க போறேன் என்று சொல்லும்போது பூரிக்க வேண்டும். இது வாசியோகத்தில் ஒரு பகுதி.
தனித்துவமான போதனை மையம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தெளிவாக சொல்லிக்கொடுக்கும் ஒரே இடம் இந்த பஞ்ச பூத தத்துவ பயிற்சி மையம், வரக்குட்டப்பாளையத்திலே. மேலும் வெளிநாடுகளுக்கு வருவோம், உண்மை பல உடைத்து விடுவோம். காசு பணம் எங்களை சேர்ந்தது. நன்மையை பரப்புவதே எங்கள் வேலை, பணம் முக்கியம் இல்லை. எங்களுக்கு இருக்கிறது சிவன் சொத்து கோமணத்துணி அது போதும்.