ஒரு கேள்வி கேட்டுட்டேன் அதுக்கு விடையும் சொன்னாதான உங்களுக்கு புரியும். 98 சதவீதம் பெண்கள் யாரும் கணவனோட சந்தோஷமா இல்லைனு சொல்றீங்களே? மனைவி என்பவள் கணவனை அன்பால் பார்ப்பவள், அதே போல் கணவனும் மனைவியிடம் அன்பாய் இருக்கணும்.
சொல்லுங்க சாமி என்று மனைவியை கணவனும் கேட்பார். மனைவி சொல்லுங்க பிரபு அப்பிடினு பேசுவார். துணைவியாரை பேசும்போது வாடி போடி அவளே இவளேனு பேசுறோம் அதுக்கு தகுந்த மாதிரி தான் அவங்களும் குடுப்பாங்க.
இதுக்கு இடைல எதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் வாக்குவாதம் வருது, எங்க? மேல் உலகத்துல, அவங்களுக்கே வாக்குவாதம் வரும் போது நம்ம எம்மாத்திரம். அப்ப அவங்க சொல்ராங்க யாரோ நம்மல பாத்துருக்காங்க.
ஒருத்தர் சரியா ஆணி அடுச்சுகிட்டு இருப்பாரு, சரியா அடி விழுந்துகிட்டு இருக்கும். பார்வை எங்கயோ இருந்தாலும் கை சரியா வேல செய்துகிட்டு இருக்கும். ஆனால் அடுத்தவங்க பார்க்கும் போது தன்னை அறியாமல் அந்த கை சுத்தியல் ஆணியை விட்டுவிட்டு கையில் பட்டு விடும். அதுக்கு காரணம் அடுத்தவங்க பார்வை, விகாரமான எண்ணம் உள் புகுந்து விடும்.
அதே மாதிரி ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியை எவரோ ஒருவர் பார்த்து விடுவார். பக்தி பெருசா சக்தி பெருசா என்று போட்டி வந்ததுல, பக்திக்கு தான் முதலிடம் குடுத்துருக்காங்க. பக்தின்னா ஆஞ்சநேயன். ராம ஆஞ்சநேய யுத்தம் அதுல ராமர் அம்பு விடுவாரு ஆஞ்சனேயரு ராம் ராம் என்று சொல்லுவாரு அம்பு மாலையாய் விழும். அங்க பக்தி ஜெய்சிருச்சு.
பூலோக வாசிகளே இப்ப தான் முக்கியமான வாக்கியத்துக்கு வரேன் நல்லா கவனிச்சுக்குங்க, மனைவியா இருந்தாலும் தொழிலாளியா இருந்தாலும் முதலாளியா இருந்தாலும், கொவப்படுபவராய் இருந்தாலும், அறியாமையில் எதிர்த்து பேசுபவராய் இருந்தாலும், தாங்கள் கிழக்கும், வடக்கும் முகம் பார்ப்பது போல் நிற்க வேண்டும், அந்த பிரச்சினைக்கு உரியவர் மேற்கும் தெற்கும் பார்ப்பது போல் நிற்க வேண்டும்.
கிழக்கு வடக்கு பக்கம் நீங்கள் நின்றும் தெற்கு மேற்கு பக்கம் நின்றும் இன்னும் காரியம் பூர்த்தி ஆகவில்லை என்றால், அவருக்கு வலது ஸ்வாசம் அதிகமாக ஓடிக்கொண்டு இருக்கும், நமக்கு இடது ஸ்வாசம் ஓடிக்கொண்டிருக்கும், அல்லது இருவருக்குமே வலது ஸ்வாசம் ஓடும், அல்லது இருவருக்குமே இடது ஸ்வாசம் ஓடும்.
எந்த திசையை பார்த்து நிற்கிறார் என்றால், கிழக்கு வடக்கு நோக்கி நிற்கும் ஒருவர் அவருக்கு வலது ஸ்வாசம் ஓடினால் அவரை ஜெய்ப்பவர் வானவர் கூட முடியாது. தெற்கு மேற்கு பார்த்து நின்று, அல்லது கிழக்கும் வடக்கும் பார்த்து நின்றாலும் அவருக்கு இடது நாசி ஸ்வாசம் அதிகமாக ஓடினால் தோற்பது உறுதி, இது வாசியோகத்துடைய சூட்சமம்.
ஏன் சண்ட வருது, மனைவி அடிச்சா போலீஸ் ஸ்டேஷன் போவேன், மகளிர் மன்றத்துக்கு போவேன், அண்ணன் தம்பிய கூடிட்டு வருவேன், எதுக்கு இந்த பிரச்சனை யாரா இருந்தாலும் கலையை மாத்திக்கொள்ளுங்களேன், வாசியோகத்த பயன்படுத்துங்களேன், எங்க சொல்லிகுடுக்குறாங்கன்னு தேடி போங்களேன்.
கதைகள் பேசி ப்ரயோஜனம் இல்லை, ஒரு பலனும் இல்லை. டிவி நிகழ்ச்சி பாத்துருப்பீங்க, விடிய விடிய பேசுவாங்க, பேச்சு இருக்கலாம், வீட்டுல பொய் பாருங்க பிரச்சினைய, அவருக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். கணவன், மனைவி முதலில் வாழ்க்கையை வெற்றி கொள்ளணும், பிள்ளைகளை பக்குவமாய் வளர்க்கணும்.
இவ்வளவு விஷயங்கள் சொல்லி குடுக்கும் தருவாயிலே, இது எல்லாம் சொல்லிக் குடுக்க கூடாத விஷயங்கள், அற்பர்களுக்கு போய் சேர்ந்து விடும் பயமா இருக்குது, கேலி பண்ணிவிடுவார்கள். எல்லாம் என் திறமையினால் முடியும், வீம்பு பிடித்தவர்கள், அவங்க எல்லாம் நல்லா உழைக்கனும், கஷ்டப்படணும், கடைசில ஜலம், மலம், கால் வழி போகும் போது அப்ப உணருவாங்க. அவங்களுக்கு இதுலாம் போய் சேரக்கூடாது.
ப்ராணத்தை இழந்து, விடிய விடிய பேசிக்கிட்டு காலத்தை வீண் பண்ணாதிங்க, ஆண்டவன் குடுத்த 60 ஆண்டுகளிலே, 20 தூங்குறீங்க, இருக்கிற வாழ்க்கை எவ்வளோ வாழ்ந்தேன்னு உங்களுக்கே தெரியாது, இதுல கோயில் குலம், சொற்பொழிவு, ஆன்மீகம் தேடுறேன், அத தேடுறேன், உலகத்த சுத்தி பாக்குறேன், எங்க போய் என்ன ஆகப்போறீங்க.
அதனால இருக்குற நாளை உபயோகமான நாட்களாக பயன்படுவதற்கு ஏற்ப செய்யிங்க. ஒரு தொழில் செய்தால் இந்த தொழில் நமக்கு பின்னாடி செய்ய முடியும், கோடிக்கணக்கான முதல் போட்டவன் வேற, சாதாரண லேபரா போனவன், அந்த தொழில் செய்து புண்ணியம் இல்ல. கடைசி வர அடிமை தான்.
ஆனா சாதாரண ஒரு தொழில், டீ கடை மாதிரி, நமக்கு எவ்வளோ பொருளாதாரம் இருக்கு, எவ்வளோ வசதி இருக்கு, நம்ம வசதிக்கு இந்த தொழிலை பயிற்சி பண்ணால், நம்ம வேலைக்கு போகாம, பிற்காலத்துல தொழில் செய்ய முடியும்னு நம்பிக்கை இருந்தால் அந்த தொழிலில் இறங்கி வெற்றி அடையலாம்.
அது போல தான் வாசியோகமும். நம்ம தெரியாத்தனமா கல்யாணம் பண்ணிட்டோம், குழந்த பெத்துட்டோம், இந்த இல்லறத்த விட்டுப்போட்டு சாமியாரா போகணும், மந்திரவாதி ஆகணும், குடும்பத்த விட்டு ஓடணும்னு நினைக்க கூடாது. இருக்குற மூச்சு எவ்வளோ, பணம் எவ்வளோ, மூச்சுக்கு தகுந்த மாதிரி ஓட்டமும், பணத்துக்கு தகுந்த மாதிரி தொழிலும் வெச்சுக்குங்க.